Friday, 2 March 2012

முதல் பதிவு....

வாழ்க்கை எனும் வசந்தத்தை இழந்து விட்டு
ஒவ்வொரு நாளும் வருந்தி கொண்டு இருக்கும்
ஆயிரத்தில் நானும் ஒருவன்...

நினைவுகள் எனும் கொடிய விசத்தை
நெஞ்சில் சுமந்து கொண்டு இருக்கும்
ஆயிரத்தில் நானும் ஒருவன்....

நண்பர்கள் பலர் இருந்தும்
நெருக்கம் கொண்டாடமுடியாத
பாவிகளில்  நானும் ஒருவன் ...

தாய் தந்தை பாசத்தை
மறுத்து தனிமையை நேசிக்கும்
அரக்கர்களில்  நானும் ஒருவன்...

உயிராய் என்னுடன்  வாழ்ந்து
என்னை வருத்தி சென்ற
பைத்தியத்தை மறுக்க
எழுத்து எனும் மருந்தை
தேடி எடுத்து கொண்டு இருக்கிறேன்..

1 comment:

  1. பாஸ் நீங்க ஆயிரத்தில் ஒருவன் ...... ஏன் பீல் பண்ணுரிங்க, be happy

    ReplyDelete